loader
இந்திய சுற்றுப்பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்! - டிரம்ப்

இந்திய சுற்றுப்பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்! - டிரம்ப்

இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் , ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலை பார்வையிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அங்குள்ள இந்தியர்களின் வாக்குகளைக் கவரும் விதத்தில் அவர் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வருகிறார் .

அப்போது இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது .

இந்நிலையில் டெல்லி மற்றும் அகமதாபாத்தில் ட்ரம்ப் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது . அதற்காக அகமதாபாத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதில் மோடி உரையாற்ற உள்ளார்.

இந்தியா வரவுள்ள ட்ரம்ப் அகமதாபாத்தில் உள்ள காந்தி ஆஸ்ரமத்திற்குச் செல்கிறார். அதனையடுத்து ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைப் பார்வையிடுகிறார். அவர் தன் மனைவி மெலானியாவுடன் தாஜ்மகால் செல்கிறார். ஆனாலும் அதற்கான அதிகாரப்பூர்வ தகவலை வெள்ளை மாளிகை அறிவிக்கவில்லை. இந்தியப் பயணத்தின்போது அவர் தாஜ்மஹால் செல்வது உறுதியாகி உள்ளது
24 மற்றும் 27-ஆம் தேதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

24-ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு அகமதாபாத்திலிருந்து ஆக்ரா புறப்படுகிறார் , அங்கே தாஜ்மகாலை சுற்றிப் பார்த்த பிறகு, அன்று மாலையே டெல்லி செல்கிறார். இரவு பிரதமர் மோடியுடன் விருது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆக்ராவில் பார்வையிட செல்ல உள்ள நிலையில் அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆக்ராவில் முகாமிட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

முதலில் ஆக்ரா செல்லும் திட்டம் இல்லை. பிறகே தாஜ்மஹாலைப் பார்க்கச் செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய சுற்றுப்பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக தனது பேஸ்புக்கில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜீ ஜின்பிங் சமீபத்தில் தமிழகம் வந்திருந்த நிலையில், இரண்டாவதாக அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் இந்தியா வர உள்ளது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News