loader
டெல்லியைக் கைப்பற்றும் ஆம் ஆத்மி! மண்ணைக் கவ்வும் பிஜேபி! பரிதாபத்தில் காங்கிரஸ்!

டெல்லியைக் கைப்பற்றும் ஆம் ஆத்மி! மண்ணைக் கவ்வும் பிஜேபி! பரிதாபத்தில் காங்கிரஸ்!

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஆரம்பத்திலேயே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி 38 இடங்களில் முன்னிலை, பாஜக 16 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆம் ஆத்மி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. ஒரு பக்கம் சிஏஏ எதிர்ப்பு போராட்டம், இன்னொரு பக்கம் டெல்லி கலவரம், நிர்பயா குற்றவாளிகள் தூக்கு வழக்கு, கடுமையான பிரச்சாரம் என்று பலகட்ட பரபரப்புக்கு மத்தியில் டெல்லியில் தேர்தல் நடைபெற்றது.

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிரச்சாரம் தொடங்கியது. கடந்த சனிக்கிழமை அங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. டெல்லி சட்டசபை தேர்தலில் 62.59% வாக்குகள் பதிவானது.

கடந்த லோக்சபா தேர்தலை விட சட்டசபை தேர்தலில் 2% அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது!

0 Comments

leave a reply

Recent News