loader
பிஜேபி Vs விஜய் விஜய் வீட்டில் வருமான வரியில் சிக்காத ஆவணங்கள்... கிண்டல் செய்து பாட்டு வாங்கிய பிஜேபி கட்சியினர்!

பிஜேபி Vs விஜய் விஜய் வீட்டில் வருமான வரியில் சிக்காத ஆவணங்கள்... கிண்டல் செய்து பாட்டு வாங்கிய பிஜேபி கட்சியினர்!

நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை.

வருமான வரித்துறையினர் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயை அழைத்து வந்து சோதனையில் ஈடுபட்டனர். இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு ரத்தானது. இதனையடுத்து நடிகர் விஜய் மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்த பாஜக முக்கிய தலைவர்கள் எச் ராஜா உட்பட பல்வேறு தரப்பினர் தவறான செய்திகளைப் பரப்பி வந்தனர்.
ஆனால் சோதனையில் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை என்பதால், பிஜேபியினரைப் பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் ரசிகர்களும் கேலி செய்து வருகின்றனர்.
அதேநேரத்தில் ரஜினிகாந்த் வருமான வரி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, கந்துவட்டி கொடுத்ததை ஒப்புக்கொண்டாலும், அதையெல்லாம் திரித்துப் பேசாத பிஜேபியினர், விஜயை மட்டும் வைத்து கிண்டலடித்துப் பேசுவது ஏன் எனவும் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்புத் தளத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. படப்பிடிப்பை எதிர்ப்பதற்காக பிஜேபியை சேர்ந்த சில தரப்பினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். விஷயம் அறிந்த விஜய் ரசிகர்கள் அங்கு திரண்டதால் போராட்டம் கைவிடப்பட்டது!

0 Comments

leave a reply

Recent News