loader
ரஜினிக்கு அரசியல் தெரியல! - உதயநிதி ஸ்டாலின்

ரஜினிக்கு அரசியல் தெரியல! - உதயநிதி ஸ்டாலின்

ரஜினிக்கு அரசியல் தெரியவில்லை என்று குடியுரிமைச் சட்டம் குறித்த ரஜினியின் கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார். 

ரஜினி பேசியது குறித்து எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ரஜினியின் கருத்துக்குக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

'நடிகராக இருப்பதால் ரஜினிக்கு அரசியல் தெரியவில்லை. அவர் முதலில் கட்சி தொடங்கி கொள்கைகளை அறிவிக்கட்டும். அதன்பின்னர் அவரது கருத்துக்குப் பதில் கூறுகிறேன்' என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திமுக சார்பில் கடந்த 3 நாட்களாக கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News