loader
'பிக் பாஸ்' 3-ல் நயன்தாராவா?!

'பிக் பாஸ்' 3-ல் நயன்தாராவா?!

விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி 'பிக் பாஸ்'. சீசன் 1 மற்றும் சீசன் 2 வெற்றிகரமாக முடிக்கப்பட்டு தற்போது 3-வது சீசன் தொடங்க உள்ளது. அதனை கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறாரா? விஜய் தொலைக்காட்சி தான் ஒளிபரப்பு செய்யப்போகிறதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

இதற்கிடையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 3-ஐ 'கலர்ஸ்' தமிழ் சேனல் ஒளிபரப்ப இருப்பதாக அண்மையில், தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கலர்ஸ் தமிழ் சேனலில் நயன்தாரா சேனலுக்கு வருவதாக கலர்ஸ் தமிழ் சேனலின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
அதனைக் கேள்விக்குறியோடு பதிவிட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையும், ஏற்கனவே வெளியான தகவலையும் வைத்துப் பார்க்கும் பொழுது, நயன்தாரா 'பிக் பாஸ் தமிழ் சீசன் 3' நிகழ்ச்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது குறித்து முறையான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News