loader
தர்பாருக்குச் சிக்கல் இல்லை! நாளை மலேசிய முழுவதும்  தர்பார்  ரிலீஸ்!

தர்பாருக்குச் சிக்கல் இல்லை! நாளை மலேசிய முழுவதும் தர்பார் ரிலீஸ்!

கோலாலம்பூர், ஜனவரி 8-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் திரைப்படம் மலேசியாவில் வெளியாவதில் சிக்கல் இருப்பதாக நேற்று தகவல் வெளியானது.
இந்நிலையில் மலேசியாவில் நாளை தர்பார் திரையிடப்படும் என்று  லோட்டஸ் நிறுவனத்தின் தலைவர் டத்தோ ரெனா துரைசிங்கம் தெரிவித்துள்ளார்.

லைக்கா நிறுவனத்திற்கு எதிராக மலேசியாவின் டிஎம்ஒய் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது. இது தொடர்பாக மலேசியாவில் தர்பார் திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும், நாளை வியாழக்கிழமை தர்பார் திரைப்படம் மலேசியா முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் நிச்சயம் வெளியாகும் எனவும் ரெனா துரைசிங்கம் கூறினார். மேலும் பொங்கல் பண்டிகையின் வெற்றிப்படமாக இது அமையும் என்றும் அவர் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News