loader
எகிப்து விபத்து மலேசியப் பெண்கள் பலி!

எகிப்து விபத்து மலேசியப் பெண்கள் பலி!

 

கெய்ரோ : எகிப்தில் நிகழ்ந்த விபத்தில் மலேசியர் உட்பட பல ஆசிய சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை பலியானதாக அதிகாரப்பூர்வ ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவ்விபத்தில் மூன்று எகிப்தியர்களுடன் இரண்டு மலேசியப் பெண்கள் மற்றும் ஓர் இந்திய ஆணும் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.

வடக்கு எகிப்தில் போர்ட் சைட் மற்றும் டாமியெட்டா நகரங்களுக்கு இடையேயான சாலையில் ஜவுளித் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பஸ் ஒன்று கார் மீது மோதியதில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது என்று அரசு நடத்தும் அல்-அஹ்ரம் செய்தித்தாள் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

கெய்ரோவிற்கு கிழக்கே செங்கடலில் உள்ள ஐன் சோக்னா ரிசார்ட்டுக்குச் செல்லும் சாலையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகள் மோதியதில் சில மணி நேரங்களிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறைந்தது 24 பேர் காயமடைந்தனர், அவர்களில் பலர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று மருத்துவ வட்டாரம் மேலும் விவரங்களைத் தெரிவித்துள்ளது.

எகிப்தில் போக்குவரத்து விபத்துக்கள் பொதுவானவை. அங்குப் பல சாலைகள் சரியாக பராமரிக்கப்படவில்லை. விதிமுறைகள் தளர்வாக செயல்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது.

கெய்ரோவின் தென்கிழக்கில் சூயஸ் கவர்னரேட்டில் உள்ள ஒரு பிரபலமான கடலோர ரிசார்ட் நகரம் ஐன் சோக்னா.  இது பல பெட்ரோ கெமிக்கல், மட்பாண்ட மற்றும் எஃகு தொழிற்சாலைகளுக்கும் பிரசித்திப்பெற்றது!

0 Comments

leave a reply

Recent News