loader
குடியுரிமை திருத்த சட்டத்தின்படி யார் இந்தியர்?

குடியுரிமை திருத்த சட்டத்தின்படி யார் இந்தியர்?

நாடு முழுவதும் இந்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.

என்ன சொல்கிறது இந்தச் சட்டம்?

ஒருவர் முதலில் தான் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க வேண்டும். அவர், ஹிந்து, கிறிஸ்துவம், சீக்கியம், புத்தம், சமணம் அல்லது பார்சி மதத்தை சேர்ந்தவர் என்றால் அவர் இந்திய குடியுரிமை பெறுவதற்கான முதல் தகுதியை பெறுகிறார். ஆனால், அவர் இஸ்லாமியராக இருந்தால், குடியுரிமை பெறுவதற்கான தகுதியை இழக்கிறார்.

அடுத்ததாக அவர் எந்த நாட்டிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார் என்பதை உறுதிபடுத்த வேண்டும். அவர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் ஒன்றிலிருந்து இந்தியாவுக்கு குடியேறியிருந்தார், அவர் இந்திய குடியுரிமை பெறுவதற்கான இரண்டாவது தகுதியை பெறுகிறார். ஒருவேளை அவர் வேறு நாடுகளிலிருந்து குடிபெயர்ந்ததிருந்தால் குடியுரிமை பெறுவதற்கான தகுதியை இழக்கிறார்.

அடுத்ததாக அவர் எந்த தேதியில் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார் என்பதை உறுதிபடுத்த வேண்டும். அவர் 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்குள் குடிபெயர்ந்திருந்தால் அவர் இந்திய குடியுரிமை பெறுவதற்கான முழு தகுதியையும் பெறுகிறார். அந்தக் குறிப்பிட்ட தேதிக்குப் பின்னர் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்திருந்தால் அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது.

தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது, குடியுரிமை சட்ட திருத்தத்தின் ஷரத்துகளின்படி, ஒவ்வொரு இந்தியரும், தான் இந்தியர்தான் என்பதை நிரூபிக்க வேண்டும். குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணத்தை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவர் இந்திய குடிமகன் என்பது ஏற்றுக்கொள்ளப்படும். ஆவணங்களை சமர்ப்பிக்க தவறினால், குடியுரிமை பறிக்கப்படும். குடியுரிமை பறிக்கப்பட்டவர்கள் அனைவரும், அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்படலாம். அவர்களில் பலர் சொந்த நாட்டிற்கு நாடுகடத்தப்படலாம்!

 

0 Comments

leave a reply

Recent News