loader
கூகுள் மேப்பில் அட்டகாசமான புது வசதி

கூகுள் மேப்பில் அட்டகாசமான புது வசதி

இன்றைக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் வரப்பிரசாதமாக கூகுள் மேப் விளங்கி வருகிறது. கிராமப்புறங்களில் இருந்து சென்னைக்கு வாகனம் ஓட்டிப் பிழைக்க வரும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மட்டுமல்லாது தனியார் வாகன சேவை நிறுவனங்களுக்கும் கூகுள் மேப் மிகச்சிறந்த உபகாரியாக விளங்கி வருகிறது.

ஸ்மார்ட் ஃபோன்களில் கூகுள் மேப் செயலியை நிறுவிக் கொண்டால் போதும். நாம் செல்ல வேண்டிய முகவரியை அதில் உள்ளீடு செய்தால் எந்தப் பாதையில் சென்றால் தூரம் குறைவு, மொத்த பயண நேரம், இலக்கைச் சென்றடைய சுருக்கு வழி இருக்கிறதா? போன்ற தகவல்கள் அனைத்தையுமே கூகுள் மேப் அள்ளித்தரும்.

இதெல்லாம் கூகுள் மேப் செயலியில் தற்போது புழக்கத்தில் இருக்கக் கூடிய வசதிகளே!

இதில் மேலதிகமாக ஒரு புதிய வசதியை கூகுள் நிறுவனம் இணைக்கவிருப்பதாகத் தகவல். கூகுள் மேல் செயலியில் 'லைட்டிங்'' என்ற புது வசதி இணைக்கப்படவிருக்கிறது. இதன் மூலமாக இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள முடியும் என கூகுள் மேப் கூறுகிறது. அதன்படி கூகுள் மேப்பில் இந்த வசதியைத் தேர்வு செய்தால், இரவு நேரங்களில் அதிக விளக்குகளுடன் பிரகாசமாக இருக்கக் கூடிய பாதைகளை கூகுள் மேப் அடையாளம் காட்டுமாம். இது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்ல கூகுள் மேப் பயன்படுத்தும் வெளியூர்வாசிகளுக்கும், பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் கூட பாதுகாப்புத் தரும் வசதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News