loader
ரஜினிக்கு வலது கை விரலில் மை வைத்த சர்ச்சை!

ரஜினிக்கு வலது கை விரலில் மை வைத்த சர்ச்சை!

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது,  வாக்குச்சாவடிக்கு வந்து  நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.  அப்போது ரஜினியின் வலது கை விரலில் மை வைத்தனர் அங்குள்ள அதிகாரிகள்.   இது சர்ச்சைக்குள்ளானது.
இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று பதிலளித்தார். அதில்
"குறிப்பிட்ட விரலில் வைக்க வாய்ப்பு இல்லை என்றால் சில நேரங்களில் வேறு விரல்களில் வைக்கலாம். இது பொதுவானது தான்.
தேர்தல் பணியில் இருந்த ஊழியர்கள் தவறுதலாக வலது கைவிரலில் அடையாள மை வைத்திருக்கலாம். பணியில் இருந்த ஊழியர் செய்த தவறுக்கு அறிக்கை கேட்கப்படும்’’என்று தெரிவித்துள்ளார்!

 

0 Comments

leave a reply

Recent News