loader
ஓ அப்படியா என்னைக்  கூப்பிடவில்லை!  அதுவரைக்கும் எனக்கு மகிழ்ச்சி!  - நஜீப் துன் ரசாக்

ஓ அப்படியா என்னைக் கூப்பிடவில்லை! அதுவரைக்கும் எனக்கு மகிழ்ச்சி! - நஜீப் துன் ரசாக்

கோலாலம்பூர் நவம்பர்- 19

டத்தோ ஸ்ரீ ஹீசாமுடீன் தலைமையில் தேசிய முன்னணியைச் சேர்ந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  பி.கே.ஆர் கட்சியின் துணைத்தலைவர்  அஸ்மின் அலியை அவரது இல்லத்தில் ரகசியமாகச் சந்தித்ததைத் தொடர்ந்து, பல விதமான முணு முணுப்புகள்  அரசியல் வட்டாரம் தொடங்கி, டீக்கடை வரை பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 1 எம்டிபி வழக்கில் சிக்கித் தனது வழக்கு விசாரணைக்காக ஜாலான் டூத்தா உயர் நீதிமன்றத்திற்கு வருகையளித்த முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப்பிடம் இந்த விவகாரம் தொடர்பாகக் கருத்து கேட்டபோது, "ஓ அப்படியா எனக்கு அழைப்பு வரவில்லை... அதுவரைக்கும் எனக்கு சந்தோஷம்" எனப் பதில் அளித்துள்ளார்.

தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்னையைக் கவனிப்பதில் கவனம் செலுத்துங்கள். பக்காத்தான் உள்விவகாரத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நீங்கள் மூக்கை நுழைக்கவேண்டாம் என அவர் கருத்து தெரிவித்தார்.
நம் கட்சியை வலுப்படுத்த வேண்டிய வேலைகள் நிறைய உள்ளது. முதலில் சொந்த வீட்டுப் பிரச்னையைப் பாரப்போம், பிறகு அடுத்த வீட்டுப் பிரச்னைக்குப் போகலாம். நான் என் சொந்த வீட்டுப் பிரச்னையில் இருக்கிறேன்.  தேசிய முன்னணி என்கிற எனது வீட்டை வலுப்படுத்தும் வேலை நிறைய உள்ளது. அதோடு மக்களைச் சந்திக்க வேண்டிய நிகழ்ச்சிகள் நிறைய உள்ளது. நான் அதில் பிஸியாக உள்ளேன். ஆகையால், அவர்கள் என்னை அழைக்காத வரை எனக்கு மகிழ்ச்சி என டத்தோஸ்ரீ நஜீப் நக்கலாகக் கூறினார்!

0 Comments

leave a reply

Recent News