loader
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல்...  தேசிய முன்னணி அபார வெற்றி!  புத்துயிர் பெற்றது ம.சீ.ச!

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல்... தேசிய முன்னணி அபார வெற்றி! புத்துயிர் பெற்றது ம.சீ.ச!

 

 

தஞ்சோங் பியாய் நவம்பர் - 16 

 

நாட்டில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் தேசிய முன்னணி 25466 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளது. 

ஆளும் கட்சியான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 10380 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் பக்காத்தான் ஹராப்பான் தேசிய முன்னணியிடம் தனது தொகுதியைப் பறி கொடுத்துள்ளது.

15086 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய முன்னணி  வேட்பாளர் வீ ஜெக் செங் வெற்றிபெற்றுள்ளார். அவர் பெற்ற வாக்குகள் 25466.

 

அவரைத் தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்  கர்மாய்னீ சார்டினி 10,380 வாக்குகளும், கெராக்கான் வேட்பாளர்  வெண்டி சுப்ரமணியம் 1707 வாக்குகளும், பெர்ஜாசா வேட்பாளர் பட்ரூள் ஹீசாம் 850 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர்களான அங் சுவான் லோக் 380 வாக்குகள், ஃபாரிடா அர்யானி 32 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதில் 565 வாக்குகள் செல்லாத வாக்குகள் ஆகும்.

 

மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ள தேசிய முன்னணி, சீன வாக்காளர்களின் வாக்குகளை இம்முறை தன் வசப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து  கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியைத் தழுவிய ம.சி.ச மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது என்பது தெரிகிறது!

0 Comments

leave a reply

Recent News