loader
உயிர்த்தெழுதல்! முட்டைக்குள் நாம்...

உயிர்த்தெழுதல்! முட்டைக்குள் நாம்...

(சுந்தராம்பாள், கெடா)

மனிதனின் உடலைச் சுற்றி முட்டை வடிவத்தில் ஒரு சூட்சும உடல் உள்ளது. இதை ஆங்கிலத்தில் 'AURA' என குறிப்பிடுகிறார்கள். இந்து மதம் இதையே பிரம்மம் என குறிப்பிடுகிறது. மனிதனின் ஆயுள் , ஆரோக்கியம், நோய் முதலியவைகளை நிர்ணயிப்பது இந்த சூட்சும உடலேயாகும். அதாவது மனிதன் ஒரு சூட்சும முட்டைக்குள் வாழ்கிறான். அந்த முட்டைக்குள் இருக்கும் சூட்சும சக்தியின் அளவே அவனுடைய ஆயுள் காலமாகும். முட்டைக்கு வெளியே பிரபஞ்ச ஆற்றல் நிரம்பிக்கிடக்கிறது. முட்டையிலிருந்து வெளியே வந்து பிரபஞ்சத்தோடு கலந்துவிட்டால் அவன் பேராற்றல் மிக்க மனிதனாக மாறிவிடுவான். இதற்கு முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே வரவேண்டும்.

முட்டைய உடைத்து உங்களை வெளிக்கொண்டு வர ஒரு குருவால் முடியும். அதுவே குரு தீட்சை எனப்படுகிறது.(கோழி முட்டையை அடைகாத்து குஞ்சிகளை முட்டைக்குள்ளிருந்து விடுவிப்பது போல் குருவின் ஸ்பரிச தீட்சை உங்களை முட்டைக்குள்ளிருந்து விடுவிக்கிறது) உங்களைப் பிரபஞ்ச ஆற்றலோடு சேர்த்து வைக்க ஒரு குருவால் முடியும். இவ்வாறு முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவருவதையே மறு பிறப்பு அல்லது உயிர்த்தெழுதல் எனக் குறிப்பிடுகிறார்கள். கிருஸ்தவ மதம் இதை ஈஸ்டர் பண்டிகையாகக் கொண்டாடுகிறது. இயேசு கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்தார் எனக் குறிப்பிடுவது இந்த விசயத்தையே ஆகும். முட்டை வடிவம் மூடிய கல்லறையாகப் பாவிக்கப்படுகிறது. அதைத் திறந்துகொண்டு வெளிவருதல் உயி்ர்த்தெழுதலாகப் பாவிக்கப்படுகிறது. இந்து மதம் உயிர்ந்தெழுந்தவர்களை ‘த்விஜன்’ எனக் குறிப்பிடுகிறது. ‘த்விஜன்’ என்றால் இரு முறை பிறந்தவன் என்று பொருள்!

 

0 Comments

leave a reply

Recent News