loader
சென்னையில் அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள், தலைவர்கள் மாநாடு!  மலேசியப் பேராளர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் பங்கேற்பு!

சென்னையில் அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள், தலைவர்கள் மாநாடு! மலேசியப் பேராளர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் பங்கேற்பு!

கோலாலம்பூர், நவ.13- சென்னையில் மூன்றாம் அனைத்துலக தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் தமிழ்மலர், தேசம், அநேகன், தமிழ் லென்ஸ் ஆகிய மலேசிய ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.

'எழுமின் தி ரைஸ்' என்றழைக்கப்படும் அமைப்பு நடத்தும் இந்த  மூன்று நாள் (14 முதல் 16 வரை) மாநாடு, சென்னை நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்துவக் கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், மியான்மார், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, நார்வே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், கத்தார், குவைத், பஹ்ரைன், இலங்கை மொரீசியஸ் உள்ளிட்ட 35-க்கும் மேலான உலக நாடுகளில் இருந்து தமிழ்த் தொழிலதிபர்கள், தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் மலேசியாவைப் பிரதிநிதித்து 65 பேராளர்கள், குறிப்பாக வர்த்தகர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாடு திறனாளிகளைச் சந்திக்கவும், தொழில் – வணிக உறவுகளை உருவாக்கிக் கொள்ளவும் அரிய வாய்ப்பாக அமையும்.

எழுமின் அமைப்பு முதல் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாட்டினைக் கடந்த 2018-ஆம்ம் ஆண்டு டமதுரை மாநகரிலும், இரண்டாம் மாநாட்டினை மலேசியா கோலாலம்பூர், சைபர் ஜெயா பல்கலைக்கழகத்திலும் நடத்தியது.

இந்த மாநாட்டிற்கு ஊடகவியலாளர்களான தமிழ் மலர் பத்திரிகையின் துணையாசிரியர் ப.புவனேஸ்வரன், தேசம் தலைமை ஆசிரியர் குணாளன் மணியம், அநேகன் தலைமையாசிரியர் தயாளன் சண்முகம், தமிழ்லென்ஸ் நிருபர் காளிதாஸ் சுப்பிரமணியம் ஆகியோரும், இன்று நவம்பர் 13 புதன்கிழமை சென்னை பயணமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News