loader
படுத்தப் படுக்கையில் அமிதாப்!

படுத்தப் படுக்கையில் அமிதாப்!

மும்பை: இந்திய சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன் வீட்டில் படுத்தப்படுக்கையில் இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. தனது உடல், 'ஸ்லோ டவுன்' ஆகியிருப்பதாக அவர் மெசேஜ் வெளியிட்டதால் ரசிகர்கள் உருக்கமாக ஆறுதல் தெரிவித்துள்ளனர். நடிகர் அமிதாப்பச்சனுக்கு 77 வயது ஆகிறது. இன்னமும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதுடன், 2020-ஆம் ஆண்டு வரை, படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலை யில் கடந்த சில வாரங்களுக்கு முன் அமிதாப்பச்சனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவரை, உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 3 நாள் சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், வெளியில் எங்கும் செல்லாமல் படுத்தப்படுக்கையில் அவர் ஓய்வில் இருப்பதாகத் தெரிகிறது. தனது உடல்நிலை குறித்து அவரே அடிக்கடி இணையத்தள பக்கத்தில் தகவல் தெரிவித்து வருகிறார்.

 

'நாள் முழுவதும் பெட்டில் படுத்தபடிதான் ஓய்வில் இருக்கிறேன். எனக்கு ஒரே பொழுதுபோக்கு தற்போதைக்கு பிரிமியர் லீக் விளையாட்டு பார்ப்பது மட்டும்தான். இந்தச் சூழல் எனது உடல்நிலையை ஸ்லோ டவுன் ஆக்குவதற்கான சிக்னல் ஆக இருக்கிறது' என அமிதாப் மெசேஜ் செய்துள்ளார்! 

 

0 Comments

leave a reply

Recent News