loader
அஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டில் இலவச நிதி கல்வியறிவு பட்டறை!

அஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டில் இலவச நிதி கல்வியறிவு பட்டறை!

பணத்தைச் சேமிக்க வேண்டுமா? பணி ஓய்வுத் திட்டம் குறித்த தகவல்கள் அறிய வேண்டுமா?அப்படியென்றால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 10-ஆம் தேதி சுபாங் டெய்லர் பல்கலைக்கழகத்தில் காலை 8.30 மணி தொடக்கம், மாலை 4.30 மணி வரை ‘அஸ்ட்ரோ உறுதுணை’ ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இலவச நிதிகல்வியறிவு பட்டறையில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.

இப்பட்டறையில் பணத்தை எவ்வாறு சேமிப்பது? விருப்பம் மற்றும் தேவைக்கு இடையிலான வேறுபாடுகள், ஒரு பட்ஜெட்டை உருவாக்கி அதனை எவ்வாறு செயல்படுத்துவது? மேல்கல்வி பட்டப்படிப்புச் செலவுகள், சொந்த வீடு வாங்கும் வழிமுறைகள், பணி ஓய்வுத் திட்டம் எனப் பல அரிய தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.

இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விநியோகச் சங்கிலி மேலாண்மையில் நன்கு புலமைப் பெற்ற ‘டெய்லர்’ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் முருகன் கிருஷ்ணமூர்த்தி, AKPK எனப்படும் நிதி ஆலோசனை மற்றும் கடன் நிர்வாக நிறுவனத்தின் நிதி கல்வித் துறை மேலாளர்நிர்மலா சுப்பிரமணியம், ASNBசந்தைப்படுத்தல் மற்றும் நிதிகல்வியறிவு பகுதியின் துணைத் தலைவர் சித்தி நோரிலா ஷம்சுல் பஹ்ரி மற்றும் இளம் செய்தி வாசிப்பாளரும் இந்தியாவில் ஹானர் விருது பெற்ற நேசன் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

இப்பட்டறையில் கலந்து கொண்டு பயன் பெற விரும்புவார்கள் http://bit.ly/JomSave​அகப்பக்கத்தை நாடி இப்பொழுதே பதிவு செய்யலாம்.

இந்த இலவசப் பட்டறை அஸ்ட்ரோ உறுதுணைநிதி ஆலோசனை மற்றும் கடன் நிர்வாக நிறுவனம் மற்றும் டெய்லர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்குகின்றது!

 

0 Comments

leave a reply

Recent News