loader
1.65 பில்லியன் அமெரிக்க டாலர் பாமாயில் வர்த்தகத்தை இழக்கும் மலேசியா?!  பாமாயில் வேண்டாம் என்கிறது இந்தியா!

1.65 பில்லியன் அமெரிக்க டாலர் பாமாயில் வர்த்தகத்தை இழக்கும் மலேசியா?! பாமாயில் வேண்டாம் என்கிறது இந்தியா!

புதுடில்லி (அக் .21): காஷ்மீர் மோதல் குறித்து பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமது கூறியதை அடுத்து, புதுடெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து எண்ணெய் வித்து நொறுக்குபவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும  இந்திய வர்த்தக அமைப்பு, நேற்று (21.10.2019) திங்களன்று தனது உறுப்பினர்களுக்கு மலேசியாவிலிருந்து பாமாயில் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. மலேசியாவிலிருந்து பாமாயிலை பெருமளவில் இறக்குமதி செய்தாலும், இப்போதைக்கு மலேசியாவிலிருந்து பாமாயில் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என மும்பையைச் சேர்ந்த SEA அமைப்பின் தலைவர் அதுல் சதுர்வேதி குறிப்பிட்டுள்ளார்.

மலேசியா 2018 ஆம் ஆண்டில் மட்டும் 1.65 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பாமாயிலை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதி நாடான  இந்தியா, இந்தோனேசியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளைத்தான் அதன் பாமாயில் விநியோகத்திற்காக நம்பியுள்ளது.

ஆனால்,  ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து

ஐ.நா பொதுச் சபையின் 74 வது அமர்வில், பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தனது உரையில் "ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. தீர்மானம் இருந்தபோதிலும், நாடு படையெடுத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" என்றும், "இந்த பிரச்சினையைத் தீர்க்க பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்" என்றும் இந்தியாவுக்குக் கோரிக்கை வைத்தார். இதன் எதிரொலியாக இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News