loader
தொடங்கியது தமிழகத் தேர்தல்....  அஜித், ரஜினி காலையிலேயே  வாக்களித்தனர்!

தொடங்கியது தமிழகத் தேர்தல்.... அஜித், ரஜினி காலையிலேயே வாக்களித்தனர்!

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தமிழகத் தேர்தல் இன்று தொடங்கியது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகம் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதி தவிர்த்து 38 தொகுதிகளிலும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்றுகாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் காலை முதலே உற்சாகத்துடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு வந்து வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர்கள் அஜித், ரஜினி, நடிகை ஷாலினி ஆகியோர் காலையிலேயே தங்களது வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்!

0 Comments

leave a reply

Recent News