loader
உலகப் படத்தை இயக்கும் ஷங்கர்...  ஜாக்கிசான் உட்பட இந்திய சூப்பர் ஸ்டார்ஸ் நடிப்பதாகத் தகவல்!

உலகப் படத்தை இயக்கும் ஷங்கர்... ஜாக்கிசான் உட்பட இந்திய சூப்பர் ஸ்டார்ஸ் நடிப்பதாகத் தகவல்!

கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' முடிந்தவுடன், ஷங்கரின் அடுத்த படம் உலகப் படமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

உலகத் தரத்திலான கதையும், அதற்கான முதற்கட்டப் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தில் ஜாக்கி சான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நல்ல கதையம்சம் கொண்ட இந்தியப் படங்களுக்கு சீனச் சந்தைகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை இயக்குனர் ஷங்கர் நன்கு கணக்கிட்டுள்ளார்.  இதை மனதில் வைத்து, தனது சந்தையை விரிவுபடுத்த விரும்புகிறார் ஷங்கர்.  

இந்திய திரையுலகின் மேலும் நான்கு சூப்பர்ஸ்டார்கள் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

நீருக்கடியில் நிகழும் அதி பயங்கர சாகச த்ரில்லராக இப்படம்  இருக்கும் என்று சொல்லப்படுகிறது!

 

0 Comments

leave a reply

Recent News