loader
புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் முகேன்...  நேரடியாக இறுதிச்சுற்றுக்குத் தகுதி!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் முகேன்... நேரடியாக இறுதிச்சுற்றுக்குத் தகுதி!

பிக் பாஸ் சீசன் 3-ல்  இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் டாஸ்க்குகளில் எந்தப் போட்டியாளர் வெற்றி பெறுகிறரோ அவர் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு செல்வார் என்று  கூறினர். இந்த நிலையில் டாஸ்க்குகளில் போட்டியாளர்கள் பெற்ற புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளனர். அதில் கவின் கடைசி இடத்திலும், அதற்கு அடுத்த படியாக லொஸ்லியா, சேரன், தர்சன் ஆகியோர் உள்ளனர். 

இரண்டாம் இடத்தில் சாண்டியும், முதல் இடத்தில் முகேனும் உள்ளனர். ஆரம்பத்தில் தர்சன் சிறப்பாக விளையாடி முதலிடத்தில் இருந்தாலும் இறுதியாக முகேன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து நேரடியாக இறுதிச் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

எந்த ஒரு நாமினேஷனும் இல்லாமல் நேரடியாக முகேன் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றதை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

கமல்ஹாசனும் முகேனை அதற்கான பிரத்தியேக மேடைக்கு வரவழைத்து நேரடியாக இறுதிச்சுற்றுக்கு செல்வதற்கான மெடலை அணிவித்ததோடு, முகேனை வெகுவாகப் பாராட்டினார்.

இதனையடுத்து இறுதிச்சுற்றுக்கு சென்றிருக்கும் ஒரே நபர் முகேன் என்பதால், முகேன் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்!

0 Comments

leave a reply

Recent News