loader
நடிகர் பாலாஜியின் மனைவி டெல்லியில் போட்டி!

நடிகர் பாலாஜியின் மனைவி டெல்லியில் போட்டி!

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தலைநகர் புதுடெல்லியின் ஒரு தொகுதியில் தேசிய பெண்கள் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுகிறார், தமிழகத்தில் கடந்தாண்டு ‘பிக் பாஸ் 2’ மூலம் பிரபலமானவரும் காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவியுமான நித்யா.  

இவர் சமீபத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட ’தேசிய பெண்கள் கட்சி’யில் இணைந்தார். அந்தக் கட்சியின் தமிழகத் தலைவராக நித்யா நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் போட்டியிடுவது குறித்து நித்யா அண்மையில் அளித்துள்ள பேட்டியில்,  “காஞ்சிபுரம் தனித் தொகுதியில் போட்டியிடறதா முடிவு செய்திருந்தேன். ஆனா, நான் தமிழ்நாட்டுல எந்தத் தொகுதியில போட்டியிட்டாலும், அங்க போய் என்னைப் பத்தி அவதூறு பரப்பணும்கிற பிளான் வச்சிருந்தார் பாலாஜி. ஏன், டெல்லியில எங்களோட தேசியக் கட்சியின் நிர்வாகிகளுக்கே குடிச்சுட்டுப் போனைப் போட்டு, ‘அவளெல்லாம் கட்சித் தலைவியா’னு சண்டை பண்ணியிருக்கார்.

இவர் சொன்ன எதையும் காதுல வாங்கிக்காத எங்க கட்சியின் தலைநகர் நிர்வாகிகள்தான் என்னை டெல்லியில போட்டியிட அறிவுறுத்தினாங்க. வடக்கு டெல்லியில் தமிழர்கள் பரவலா வசிக்கிறது எனக்குச் சாதகமா இருக்கும்கிற நம்பிக்கை இருக்கு. அதனால சரின்னு சொல்லிட்டேன்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்!

0 Comments

leave a reply

Recent News