loader
'பரமபதம்' நான் பார்க்க விரும்பும் ஒரு திரைப்படம்!  - இயக்குநர் பாக்யராஜ்

'பரமபதம்' நான் பார்க்க விரும்பும் ஒரு திரைப்படம்! - இயக்குநர் பாக்யராஜ்

இயக்குனர் விக்னேஷ் பிரபு இயக்கத்தில் தயாராகியுள்ள 'பரமபதம்' திரைப்படம், இவ்வாண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் பிரபு  சமீபத்தில்தான் தேசம் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தில் வஜ்ரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் விக்னேஷ் பிரபு, தனது மூன்று வருட உழைப்பு, பலன் தரும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.

பழங்கால விளையாட்டாகக் கருதப்படும் 'பரமபதம்' இந்த நவீன உலகத்திற்குச் சொல்லும் கதை என்ன? என்கிற சஸ்பென்ஸ் கடல் தாண்டி இந்தியா வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இயக்குனர் பாக்யராஜ், 'பரமபதம்' திரைப்படத்தைப் பார்க்க ஆவலாக இருப்பதாக அண்மையில் பேட்டி அளித்துள்ளார். நிச்சயம் படக்குழுவினர், அவரிடம் சில காட்சிகளை போட்டுக் காட்டியிருக்கவேண்டும். அதைப் பார்த்துவிட்டு, தனது கருத்தினை பாக்யராஜ் பதிவு செய்துள்ளார்.

எப்போது இந்தப் படம் திரைக்கும் வரும்? என்பதை, விரைந்து அறிவிப்பாரா விக்னேஷ் பிரபு?

0 Comments

leave a reply

Recent News