loader
பிக் பாஸ்ஸில் இருந்து வெளியேற்றப்பட்ட கவின்?!

பிக் பாஸ்ஸில் இருந்து வெளியேற்றப்பட்ட கவின்?!

 

 

பிக் பாஸ் சீசன் 3-ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா மற்றும் கஸ்தூரி இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் சேரன் பிக் பாஸ் வீட்டிலிருந்த சீக்ரெட் ரூமில் வைத்து இருந்தனர். பின்பு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.
இதனையடுத்து போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினர்களாக அழைத்து வந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.
கவினின் தாயார் மற்றும் குடும்பத்தினரின் தனிப்பட்ட பிரச்னைகள் கவினுக்குத் தெரியாமல் இருந்து வந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போட்டியாளர்களின் குடும்பத்தினரில் ஒருவர் இந்தத் தகவலை கவினிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. பின்பு சரவணனைக் கண்ணைக் கட்டி அனுப்பியது போல் கவினையும் அனுப்பியது போன்ற ஒரு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மேலும் கவின், லாஸ்லியா காதல் விவகாரமும் பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருந்து வெளிவரவில்லை!

 

0 Comments

leave a reply

Recent News