loader
பிக்பாஸ் 3  தொகுப்பாளினியாக ரம்யா கிருஷ்ணன் அதிரடி மாற்றம்!

பிக்பாஸ் 3 தொகுப்பாளினியாக ரம்யா கிருஷ்ணன் அதிரடி மாற்றம்!

தமிழ் பிக்பாஸைத் தொடர்ந்து தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார்.

நடிகர் நாகர்ஜுனா தனது பிறந்தநாளைக் கொண்டாட ஸ்பெயின் நாட்டுக்குக் குடும்பத்துடன் சென்றிருப்பதால், அவரின் ஆலோசனையின் பேரில் ரம்யா கிருஷ்ணனை தொகுப்பாளராக்கியது நிகழ்ச்சிக் குழு.

இதையடுத்து ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

ரம்யா கிருஷ்ணனின் வருகை தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. நாகர்ஜுனா ஸ்பெயினில் இருந்து திரும்பும் வரையில் ரம்யா கிருஷ்ணனே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்படுகிறது!

0 Comments

leave a reply

Recent News