loader
ப.சிதம்பரம் அதிரடி  கைது!

ப.சிதம்பரம் அதிரடி கைது!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. இதனையடுத்து, முன்ஜாமின் கோரி ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கை வெள்ளியன்று விசாரிப்பதாக தெரித்த நிலையில்,  அதிரடியாக ப. சிதம்பரத்தை கைது செய்துள்ளது சிபிஐ.
முன்னாள் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியது. இதற்கு, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிஐ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறையும் தனியாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில், கடந்த ஆண்டு கார்த்தி சிதம்பரம் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் சிதம்பரமும் இடம்பெற்றிருப்பதால், அவரும் கைதுசெய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து டெல்லி ஜோர் பாக் இல்லத்தில் நுழைந்த சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக அவரை நேற்று கைது செய்தனர்!

0 Comments

leave a reply

Recent News