loader
முகேன் ராவ் உறவினர்களைத் தேடித் தேடி பேட்டி எடுப்பது ஏன்? ஊடகங்கள் சில  ‘அந்த’ப் பெண்ணைச் சூழ்வது ஏன்?

முகேன் ராவ் உறவினர்களைத் தேடித் தேடி பேட்டி எடுப்பது ஏன்? ஊடகங்கள் சில ‘அந்த’ப் பெண்ணைச் சூழ்வது ஏன்?


தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளியேறும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நம் நாட்டு  கலைஞர் முகேன் ராவ் கலந்துகொண்டுள்ளார்.
அங்கு அவர் சென்ற சில வாரத்தில் அபிராமி என்ற நடிகை அவருடன் நட்பு வைத்துப் பழக ஆர்ம்பித்த காலகட்டத்தில் இருந்து, இணைய ஊடகங்களில் முகேன் ராவ் உறவினர் என்று கூறப்படும் பெண்ணின் பேட்டிகள் வெளிவரத் தொடங்கியது.
அதன் பின் ஒவ்வொரு முறையும் அந்தப் பெண்ணைச் சூழ்ந்துகொண்டு பல  வெளிநாட்டு இணைய ஊடகங்கள்  அவரைப் பேட்டி எடுத்து வருகின்றனர். இப்போது அது வேற கோணத்தில் ‘பிக் பாஸ்’ வீட்டில் வனிதா மூலம் அரங்கேறுகிறது. முகேன் ராவ்-வின் தனிப்பட்ட விவகாரம் பொதுப் பஞ்சாயத்திற்கு வந்ததன் மூலக் காரணம், இப்படிப்பட்ட பேட்டிகளும், அப்பேட்டியைக் கொடுக்க முன்வந்துள்ள அவரின் குடும்பத்தினரும்தான்.
ஒருவரின் தனிப்பட்ட குடும்ப விவகாரத்தைப் பொதுவில் பேசுவது, அவரின் எதிர்காலத்தைப் பாதிக்காதா? அவரை எதற்கு அங்கு அனுப்பி வைத்தீர்கள் மிளிர்வதற்கா? அல்லது அவமானப் படுத்துவதற்கா?  எதையும் சற்றுச் சிந்தித்துப் பேச வேண்டும். உங்கள் தரப்பு நியாத்திற்கான  விடை  அவர் அந்த நிகழ்சியை விட்டு வெளியேறிய பிறகுதான் கிடைக்கும். இப்போது கொடுக்கும் பேட்டிகளால் அல்ல என்பதைப் புரிந்துக்கொண்டால் சிறப்பு.
அவரைச் சூழ்ந்து கொண்டுள்ள வெளிநாட்டு ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள், மலேசிய நாட்டில் ஒருவர் இருக்கிறார் உங்கள் நாட்டில் தேடப்படும் ஒரு குற்றவாளி அவர் என்று சொல்கிறார்கள். அவர் இங்குள்ள இந்திய சமுதாயத்திற்கும் மலேசியர்களுக்கும் தலைவலியாக இருக்கிறார். அவரை நீங்கள் பேட்டி எடுக்கலாமே? ஏன் இந்திய சமுதாயத்தை சீண்டிக்கொண்டிருக்கிறீர்கள்? ஏன் நாடு திரும்ப மறுக்குறீர்கள்?  நீங்கள் இங்கு தஞ்சம் புகுந்ததன் காரணம் என்ன? என்று பல கேள்விகளை அவரிடம் கேட்கலாமே? அதுதான் எல்லாரும் அறிந்துக்கொள்ள விரும்பும் முக்கிய விஷயம், விவகாரம். அந்த பெண்ணைக் கண்டுபிடித்து பேட்டி எடுத்த உங்களுக்கு, இவரைக் கண்டுபிடிப்பது கஷ்டமா என்ன? முதலில் அதைச் செய்யுங்கள் நீங்கள்!

(மக்களுடன் முகமூடி)

0 Comments

leave a reply

Recent News