loader
பாலிங் வெள்ளம்:  உடனடி உதவிகளுக்கு பிரதமர் உத்தரவு!

பாலிங் வெள்ளம்: உடனடி உதவிகளுக்கு பிரதமர் உத்தரவு!

கோலாலம்பூர், ஜூலை 5: கெடா, பாலிங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி மற்றும் உதவிகளை வழங்குமாறு தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நாட்மா) மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் உத்தரவிட்டுள்ளார்.

தாம் நான்கு நாள்  அதிகாரப்பூர்வ பயணமாக துருக்கி சென்றிருந்தாலும், பாலிங்கில் வெள்ள நிலைமையைக் கண்காணிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

"என் சார்பாக எனது அரசியல் செயலர் டத்தோ முகமது அனுவார் முகமட் யூனுஸிடம், நிலைமையை சரிபார்த்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் உதவிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய, அந்த இடத்திற்குச் செல்லுமாறு நான் அறிவுறுத்தியுள்ளேன்" என்று அவர் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.  

இதுவரை மூன்று உயிர்களைக் காவு கொன்ட வெள்ளம் குறித்து வருத்தம் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட அனைவரும் இந்த கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்!

 

 

 

0 Comments

leave a reply

Recent News