loader
மீண்டும் முகமூடி ..... அன்று உண்ணாவிரதம் இன்று மௌனவிரதம்...

மீண்டும் முகமூடி ..... அன்று உண்ணாவிரதம் இன்று மௌனவிரதம்...

 

அமைச்சர் வேதமூர்த்தி சமீபத்தில் தமிழ் நாளேடுகள் சிண்டு முடிக்கும் வேலையைப் பல ஆண்டுகளாகச்  செய்து வருவதாகச் சொன்னார். அது முற்றிலும் உண்மை. அவர் அரசாங்கத்தை நெருங்குவதற்காகப் பல வகையில் சிண்டு  முடிக்கும் வேலையைத் தமிழ்ப் பத்திரிகைகள் செய்தன. அதில் ஒன்றுதான் அவரின் 5 ஆண்டு கால செயல்திட்டம் வெற்றிபெற  நடத்தப்பட்ட உண்ணாவிரதம்.

அதன் பின், அவரது உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றிபெற்று,  2013 ஏப்ரல்  18-ஆம் தேதி, அப்போது அவர் சொன்னது போல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது தேசிய முன்னணி அரசுடன். அதனையும் சிண்டு முடிச்சி தமிழ்ப் பத்திரிகைதான்  எழுதியது.

அதன் பின் சில மாதங்கள்  அமைச்சராக இருந்து பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு ஒரு காரணத்தையும் சொன்னார்.  அதையும் சிண்டு முடிச்சி, தமிழ்ப் பத்திரிக்கைகள்தான் எழுதியது.

பின் துன்னோடு கைகோர்த்து 'ஸீரோ வோட் ஃபார் பி.என்'  என்ற பிரச்சாரத்தை எழுப்பினார். அதையும் தமிழ்ப் பத்திரிகைகள் சிண்டு முடிச்சி எழுதியது. இப்படித் தமிழ்ப் பத்திரிகைகள் சிண்டு முடிச்சு எழுதித்தான், இவர் மீண்டும் அமைச்சர் ஆகிவிட்டார். அவர் சொன்னதே உண்மை.

அப்போது உங்களுக்குச் சுதந்திரமாக  வேலை செய்யமுடியவில்லை எனப் பதவியை ராஜினாமா செய்தீர்கள். இப்போது  நல்ல சுதந்திரம் இருக்கு என்று நம்புகிறோம். அதனால்தான் இன்னும் ராஜினாமா கடிதம் பிரதமரைச் சென்றடையவில்லை.

ஆகையால், மாண்புமிகு அமைச்சர் அவர்களே... நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள அந்த ஜந்தாண்டு செயல்திட்டங்கள்  என்ன என்பதை, ஒன்றன் பின் ஒன்றாக இந்த முகமூடி வெளியிடுகிறேன்.
சிண்டு முடிக்க அல்ல, ரொம்ப நாளாகக் கிடப்பில் இருக்கும் கடமையைச் செய்ய.

நீங்கள் சொன்ன சரித்திரப்பூர்வமான அந்தச் செயல்திட்டம் மீண்டும் புத்துயிர் பெறுமா? என்ற கேள்வியோடு....

'உங்களுக்குப் பதில் சொல்ல அவசியம் இல்லை. எனக்கு  வேலை கொடுத்தவர்  துன்' என்று மீண்டும் பதில் கொடுத்து மௌன  விரதத்தைத் தொடராதீர்கள்....
பல ஆண்டுகள்  ஓய்வில் இருந்த பிரதமருக்கு, மீண்டும்  வேலை கொடுத்தது மக்கள்தான்... நீங்கள் சொன்னதுபோல் உங்களுக்கு வேலை கொடுத்தது பிரதமராக இருந்தாலும், நீங்கள் இருவரும் மக்கள் சேவகர்கள் என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறோம்.
ஆகையால் மக்களுக்காக நீங்கள் முன்பு  செய்த சரித்திரப்பூர்வ செயல்திட்டதிற்கு, நீங்கள் எந்தளவிற்குத் தயாராகிவிட்டீர்கள் என்பதை மக்களுக்குச் சொல்லுங்கள்.

செயல் திட்டத்தின் முதல் அங்கம்:

1. இடம்பெயர்வுக்கு ஆளான தோட்டத் தொழிலாளர்களை முன்னேற்றமடையச் செய்தல்.

1.1 முன்னாள் தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்துவது.

1.2 முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுடமைத் திட்டம்.

மற்றவை அடுத்த  முறை....
அதுவரை

(மக்களுடன் முகமூடி)

0 Comments

leave a reply

Recent News