loader
மகாதீரின் உடல் நிலையில் மாற்றம்!

மகாதீரின் உடல் நிலையில் மாற்றம்!

 

கோலாலம்பூர், ஜனவரி 26: உடல்நலக்குறைவால் தேசிய இருதய மையமான IJN   மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்டிக்கும்  முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமட்,  தற்போது உடல் நலம் தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

துன் மகா​தீர்   ​தீவிர கண்காணிப்புப்  பிரிவு வார்ட்டிலிருந்து இன்று மாற்றப்பட்டுள்ளார் என்றும், அவர் குணமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக துன் மகாதீரின் மகள் மரினா மகா​தீர் தெரிவித்துள்ளார்..

தொற்று எதுவும் பரவாமல் இருக்க  பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக   மரினா கூறினார்!

0 Comments

leave a reply

Recent News