loader
சர்வதேச எல்லைகளைத் திறப்பதற்கான தளர்வு! பரிசீலிக்கப்படும் என பிரதமர் அறிவிப்பு!

சர்வதேச எல்லைகளைத் திறப்பதற்கான தளர்வு! பரிசீலிக்கப்படும் என பிரதமர் அறிவிப்பு!

 

சர்வதேச எல்லைகளைத் திறப்பதற்கான தளர்வு!
பரிசீலிக்கப்படும் என பிரதமர் அறிவிப்பு!

புத்ராஜெயா, ஜனவரி 25 : நாட்டின் எல்லைகளை சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்க அனுமதிக்கும் வகையில் SOP களில் சிறிய தளர்வு குறித்து சுகாதார அமைச்சகத்தின் (MOH) கருத்துகள் கேட்கப்படும் என்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறுகிறார்.

கோவிட்-19 தொற்றுகள் குறித்த கவலைகள் காரணமாக, மார்ச் 2020 முதல் நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

இரண்டு டோஸ் தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் ஜாப்ஸ்  போட்டிருந்தால், SOP-ஐ சற்று தளர்த்துவது பற்றி நாம் பரிசீலிக்கலாம் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இவை அனைத்தும் சுகாதார அமைச்சகத்தின் கருத்துகளைப் பொறுத்தது என்று இன்று பிரதமர் துறையின் ஊழியர்களுடனான கூட்டத்தில் கூறினார்.

மற்ற நாடுகளில் கோவிட் -19 வழக்குகள் இன்னும் அதிகமாக இருப்பதால், மலேசியா தனது எல்லைகளை மீண்டும் திறப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எல்லைகளைத் திறக்க முடிந்தால், பொருளாதாரமும் மேம்படும் என்று அவர் கூறினார்!

0 Comments

leave a reply