loader
இன்பங்களைப் பகிர்ந்து ஒற்றுமையாய் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம்!

இன்பங்களைப் பகிர்ந்து ஒற்றுமையாய் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம்!

ரவாங், ஜனவரி 24:

பொங்கல் திருநாள் தமிழர்கள்  மிக விமரிசையாகக் கொண்டாடும் ஒரு பெருநாள்.

துன்பங்கள் நீங்கி  குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாடும் ஒரு பெருவிழா.

அந்த வகையில் எஸ்.பி.கேர் கிளினிக் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 100 உழியர்கள், தங்களது வாழ்க்கையில் இன்பமும் ஒற்றுமையும் நிலைத்திருக்க, ஓர் அடையாளமாக இம்முறை பொங்கல் விழாவைக் கொண்டாடி  உள்ளனர். இந்த  விழாவில் அந்த கிளினிக்கின் சீன , மலாய் சமூகத்தைச் சேர்ந்த பணியளர்களும் நம்மவர்களுடன் பொங்கல் வைத்து , கோலமிட்டு, உறியடி விளையாட்டில் கலந்துகொண்டனர். அந்த ஒற்றுமைப் பெருவிழாவில் அன்பும் நட்பும் மட்டும் மேலோங்கி இருந்தது.

இப்படி ஒவ்வொரு பெருநாளையும் வரவேற்று, எஸ்.பி.கேர் கிளினிக் பண்டிகைகளைத் தங்கள் உழியர்களுடன் கொண்டாடுவது வழக்கம் என, எஸ்.பி.கேர் குழுமத்தின் தலைவர் டாக்டர் சத்ய பிரகாஷ் தெரிவித்தார்.

இதன் வழி ஒருவருக்கொருவர் மற்றவர்களின் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ளவும், தெரிந்துகொள்ளவும் வாய்ப்பு ஏற்படுவதோடு, அதனை எப்படி வரவேற்று ஒன்றிணைந்து கொண்டாடுவது என்ற நடைமுறை தொன்று தொட்டு பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் மேலோங்கி இருக்கும் என அவர் தெரிவித்தார்.

மலேசிய மக்கள்  மற்ற நாடுகளைவிட பண்டிகைகளை வரவேற்பதிலும் அதில் பங்கு கொள்வதிலும் மாறுபட்டவர்கள். அதுதான் மலேசியாவின் தனிச் சிறப்பு. அதனைத் தொடர்ந்து நிலைநாட்டவே எஸ்.பி.கேர்  கிளினிக் பண்டிகைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, அதில் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து வருவதாக டாக்டர் சத்ய பிரகாஷ் தெரிவித்தார்!

0 Comments

leave a reply

Recent News