loader
வட கொரியாவில் 11 நாள்கள் சிரிக்கத் தடை!

வட கொரியாவில் 11 நாள்கள் சிரிக்கத் தடை!

 

வட கொரியாவில் மக்கள் பொது இடங்களில் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் 11 நாட்கள் தடைவிதிக்கப்படுள்ளது. கிம் ஜாங் இல் அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. கிம் ஜாங் இல் 1994 முதல் டிசம்பர் 17 , 2011, தனது மரணம் வரை வடகொரியாவின் அதிபராக இருந்தார். தற்போதைய வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல் என்பது குறிப்பிடத்தக்கது. இல் -ன் 10 வது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்க 11 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்க, நாட்டு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மக்கள் மது அருந்தவும், சிரிக்கவும் , பொழுது போக்கு நடவடிக்கையில் ஈடுபடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு டிசம்பர் 17 அன்று மளிகை பொருட்கள் வாங்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கூட கொண்டாட தடையாம். கிம் ஜாங் இல் டிசம்பர் 17 2011 மாரடைப்பு காரணமாக இறந்தார். தனது 69 வயதில் 17 வருட ஆச்சி காலத்தை முடித்திருந்தார். வருடா வருடம் பத்து நாட்கள் நடக்கும் இந்த துக்க அனுசரிப்பு நிகழ்ச்சி இந்த வருடம் 10 ம் ஆண்டு நினைவை குறிக்க 11 நாட்கள் அனுசரிக்கபடுகிறது!

0 Comments

leave a reply

Recent News