loader
ஆஸ்ட்ரோவில் உள்ளூர் தமிழ் ஆவணப்படம் ‘அந்த நாள்’ மற்றும் ‘அக்டோபர் 22’ டெலி மூவி!

ஆஸ்ட்ரோவில் உள்ளூர் தமிழ் ஆவணப்படம் ‘அந்த நாள்’ மற்றும் ‘அக்டோபர் 22’ டெலி மூவி!

 

கோலாலம்பூர், டிசம்பர் 15: இவ்வாண்டு இறுதியில், ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் உள்ளூர் தமிழ் ஆவணப்படமான ‘அந்த நாள்’ மற்றும் நாடக டெலிமூவியான ‘அக்டோபர் 22’ ஆகியவற்றை முறையே டிசம்பர் 18 மற்றும் டிசம்பர் 25 ஆகியத் தேதிகளில் ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில்  எதிர்ப்பார்க்கலாம்.

விருது வென்ற உள்ளூர் திரைப்பட இயக்குநர், இந்திராணி கோபால் தயாரிப்பிலும் மாறன் பெரியண்ணன் இயக்கத்திலும் மலர்ந்த ‘அந்த நாள்’, 1920கள் முதல் 1990கள் வரையிலான நிஜ வாழ்க்கை நிகழ்வுகளையும் அனுபவங்களையும் சித்தரிக்கிறது.

கபிலன் கந்தசாமி தொகுத்து வழங்கும் இவ்வாவணப்படம், மேற்க்கொண்ட நேர்காணல்கள் மூலம் பேரார்வம், விரக்தி மற்றும் வெற்றி ஆகியவற்றைப் பற்றிய மலேசியக் கதைகளைச் சித்தரிக்கிறது.

ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 8 மணிக்கு, ஒளியேறும் ‘அந்த நாள்’ ஆவணப்படத்தின் புதிய அத்தியாயங்களைக் கண்டு மகிழுங்கள்.

ஏ.பன்னீர்செல்வம், சித்திரா தேவி, எம்.எஸ் லிங்கம், பத்துமலை ராஜூ மற்றும் ஜமுனா ராணி நடித்த ‘அக்டோபர் 22’ எனும் நாடக டெலிமூவியையும் வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்க்கலாம். 

நவ்ரோஸ் கான் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த டெலிமூவி, பள்ளி நாட்களில் சித்ரா என்ற தனது காதலியின் நினைவுகளை மீண்டும்  நினைவுகூறும் செல்வம் என்ற முதியவரைச் சித்தரிக்கிறது.

டிசம்பர் 25,  இரவு 7 மணிக்கு ஒளியேறுகிறது ‘அக்டோபர் 22’ டெலிமூவி.

மேல் விபரங்களுக்கு, content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்!

0 Comments

leave a reply

Recent News