loader
அமெரிக்காவில் 72 லட்சம் குழந்தைகளுக்கு கொரோனா! - அதிர்ச்சி தகவல்!

அமெரிக்காவில் 72 லட்சம் குழந்தைகளுக்கு கொரோனா! - அதிர்ச்சி தகவல்!

அமெரிக்காவில் 72 லட்சம் குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் குழந்தைகள் மருத்துவ அகாடமி மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கமும் இணைந்து இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அங்கு கொரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்படும் அளவு, சராசரியாக 1 லட்சம் குழந்தைகளில் 9 ஆயிரத்து 562 பேர் கொரோனோ பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்கிற அளவில் உள்ளது. 

அமெரிக்காவில் இதுவரை 71 லட்சத்து 96 ஆயிரத்து 901 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அமெரிக்காவின் மொத்த கொரோனா பாதிப்பில் 17.2 சதவீதத்தினர் குழந்தைகளே என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

கடந்த 1 வாரத்தில் மட்டும், 1 லட்சத்து 64 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதன்மூலம், அமெரிக்காவில் தொடர்ந்து 18வது வாரமாக 1 லட்சத்துக்கும் அதிகமாக குழந்தைகளின் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல், 21 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 0.27 சதவீதத்தினர் மட்டுமே குழந்தைகள் என்பது சற்று ஆறுதலான விஷயமாக கருதப்படுகிறது.

அமெரிக்காவின் குழந்தைகள் மருத்துவ அகாடமி(ஏ ஏ பி) மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கமும் இணைந்து மேற்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News