loader
பிக்பாஸ் 3-ல் சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி

பிக்பாஸ் 3-ல் சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி

'மீ டூ' சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி, தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்ப இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கிறது. சர்ச்சைக்குப் பேர் போனவர்களையே பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களாகத் தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் அல்லது தெலுங்கு பிக்பாஸில் நடிகை ஸ்ரீரெட்டியும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட வாய்ப்புத் தருவதாக தமிழிலும், தெலுங்கிலும் தன்னைப் பலர் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியும், தனது சமூகவலைதளப் பக்கம் வாயிலாகவும் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது அவர் பாலியல் புகார் அளித்து வருகிறார். அவ்வப்போது ஆபாசமாகவும் சில பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

எனவே, அவரை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தால் நிச்சயம் நிகழ்ச்சி சூடுபிடிக்கும், நிறைய விஷயங்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இது தொடர்பாக பிக்பாஸ் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் தன்னை அணுகியதாக ஸ்ரீரெட்டியே முன்பு தெரிவித்திருந்தார். பின்னர் தமிழ் அல்லது தெலுங்கு இதில் எந்த பிக்பாஸில் பங்கேற்க விரும்புகிறீர்கள் என ரசிகர்களிடம் அவர் சர்வே கூட நடத்தினார்.

தெலுங்கை விட, தற்போது தமிழ்ப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதால், ஸ்ரீரெட்டி தமிழ் பிக்பாஸ் சீசன் 3-ல் தான் கலந்து கொள்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. நிகழ்ச்சி துவக்கநாளன்று கமல் இன்னும் இரண்டு போட்டியாளர்கள் வீட்டிற்குள் செல்ல இருப்பதாகத் தெரிவித்தார்.

அதன்படி, மறுநாளே மீராமிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். கமல் கூறியபடி இன்னும் ஒரு போட்டியாளர் மீதமிருக்கிறார். எனவே, அது ஸ்ரீரெட்டி அல்லது பவர்ஸ்டார் சீனிவாசனாகத் தான் இருக்க வேண்டும் எனக் கருதப்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீரெட்டி தமிழுக்கல்ல, தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இத்தகவலை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்!

0 Comments

leave a reply

Recent News