loader
சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டம்! 39 பேர் பலி!

சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டம்! 39 பேர் பலி!

சூடான் நாட்டில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து கடந்த மாதம் 25-ஆம் தேதி அந்நாட்டு  ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.

அதேவேளை ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சூடானின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மீது ராணுவத்தினர் கண்மூடித்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் ஏற்கனவே 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் ஹர்டோமின் பல்வேறு பகுதிகளில் நேற்று பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு, கண்ணீர்புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் போராட்டக்காரர்கள் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

இதனால், சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது!

0 Comments

leave a reply

Recent News