loader
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மனநல, உளவியல் முதலுதவி பயிற்சி!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மனநல, உளவியல் முதலுதவி பயிற்சி!

சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மனநல மற்றும் உளவியல் முதலுதவி பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நடப்பாண்டில் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் work permit வைத்துள்ள தொழிலாளர்கள் 98 பேர் மனநலக் கழகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தங்குவிடுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என சிங்கப்பூர் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொரோனா நெருக்கடி காரணமாக, சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் சமூக இடங்களுக்குச் சென்றுவர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, அவர்களது மன அழுத்தத்தைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு ஊழியர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பொழுதுபோக்கு மையங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார்.

இது வாரத்துக்கு ஒருமுறையில் இருந்து மூன்று முறைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய வருகைகளுக்கு முன் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள ஊழியர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறையையும் அமைச்சு நீக்கியுள்ளது!

விளம்பரம்:



 

0 Comments

leave a reply

Recent News