loader
மித்ரா விவகாரம் - விசாரணையைத் தொடங்கியது SPRM

மித்ரா விவகாரம் - விசாரணையைத் தொடங்கியது SPRM

இந்தியர்களின்  உருமாற்றுத் திட்டமான மித்ரா நிதி முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) விசாரணையைத் தொடங்கி உள்ளது.

மித்ராவின் 9.1 மில்லியன் நிதி செலவு குறித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ ஒருமைப்பட்டு அமைச்சர் டத்தோ ஹலிமா முகம்மட் சாடிக்கிடம் கடந்த வியாழக்கிழமை விளக்கம் கோரினார். மேலும் இது தொடர்பான சர்ச்சை கருத்துகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

இதனையடுத்து மித்ரா நிதி பகிர்ந்தளிக்கப்பட்ட விவகாரம் குறித்து  ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்தப்படுமேயானால், தாம் ஒத்துழைக்கத் தயார் என அமைச்சர் ஹலிமாவும் தெரிவித்திருந்தார்.

மேலும், மித்ரா நிதி விண்ணப்பம், அங்கீகாரம், பகிர்ந்தளிப்பு போன்ற விவகாரங்களில் அமைச்சருக்கும் மித்ரா இயக்குநருக்கும் தொடர்பு இல்லை எனவும், அது முழுக்க முழுக்க அமைச்சின் தலைமைச் செயலாளர் தலைமையில் இயங்கும் மித்ரா நிதி மதிப்பீடு செயற்குழு அதிகாரித்தின் கீழ் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், மித்ரா நிதி விவாகாரம் குறித்து Pemuda Gen Z எனும் அமைப்பிடமிருந்து ஊழல் தடுப்பு ஆணையம் ஓர் அறிக்கையைப் பெற்றிருப்பதாகவும், அது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.l

0 Comments

leave a reply

Recent News