loader
சொக்சோ மிக அவசியம்!  தொழிலாளர்கள் தங்களின் சொக்சோவை உறுதி செய்துகொள்ளுங்கள்!  - டத்தோஸ்ரீ எம்.சரவணன்

சொக்சோ மிக அவசியம்! தொழிலாளர்கள் தங்களின் சொக்சோவை உறுதி செய்துகொள்ளுங்கள்! - டத்தோஸ்ரீ எம்.சரவணன்

தங்களுக்கு சொக்சோ பாதுகாப்பு இருக்கிறதா என்பதை தொழிலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

செல்வம் காளிமுத்து -  சந்திரகலா சிவலிங்கம் தம்பதியரின் மூன்று குழந்தைகள், பெற்றோர் இருவரும் இறந்துவிட்டதால் ஆதரவின்றி இருக்கும் சூழலில், அவர்களின்  நலனுக்காக பெர்க்கேசோ ஓய்வூதிய நிதியை நேரில் சென்று  டத்தோ ஶ்ரீ சரவணன் வழங்குகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பெர்க்கேசோ சேமிப்புத் திட்டத்தின்கீழ் அக்குழந்தைகளின் தாயார்  திருமதி சந்திரகலா பெர்க்கேசோ உறுப்பினராக இருந்து சேமிப்புப் பணத்தைச் செலுத்தி வந்துள்ளார்.  ஆனால், சொந்தத் தொழில் செய்த தந்தை பெர்க்கேசோ நிதி சேமிக்கவில்லை. இதனால், தாயாரின் பெர்க்கேசோ ஓய்வூதிய நிதி தற்போது பாட்டி வீட்டில் வசிக்கும் அப்பிள்ளைகளுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் அந்த மூன்று பிள்ளைகளுக்கும்  இந்நிதி கிடைக்கும் என்றும், ஒரு வேளை, பெற்றோர் பெர்க்கேசோ திட்டத்தின் கீழ் சேமித்திருந்தால், மாதாமாதம் அந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் நிதி கணிசமானத் தொகையாக இருந்திருக்கலாம் என்றும்  அவர் தெரிவித்தார்.

பெர்க்கேசோ நிதி சேமிப்பு என்பது மிக அவசியம் என்றும்,  அதன் அவசியத்தை  சமுதாயம் அறியாமல் இருப்பது வருத்தமான விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தின் அடிப்படையில் ஒரு தொகையையும், முதலாளிகள் ஒரு தொகையையும் தொழிலாளியின் பெர்க்கேசோ கணக்கில் ஒவ்வொரு மாதமும் செலுத்தி இருக்கிறார்களா என்பதை தொழிலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களின் பெர்க்கோசோ நிதியைச் செலுத்தவில்லை என்றால், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, மற்றும் 10,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்பதையும் அவர் நினைவுறுத்தினார்!

விளம்பரம்:

0 Comments

leave a reply

Recent News