loader
நான் மித்ரா பணத்தை எடுத்தேனா? சட்ட நடவடிக்கை பாயும்!

நான் மித்ரா பணத்தை எடுத்தேனா? சட்ட நடவடிக்கை பாயும்!

 

(வெற்றி விக்டர்)

(கோலாலம்பூர், அக்டோபர் -14)

சமீபகாலமாகச் சர்ச்சையை ஏற்படுத்தி வரும்  மித்ரா  நிதி பட்டியல்  என்று கூறி வைரலாகும் தகவலில்,  பல ம.இ.கா தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ம.இ.கா பாங்கி தொகுதி  சுங்கை ராமால் கிளைத்தலைவர்  டத்தோ ரவிச்சந்திரன், மித்ராவில் இருந்து 8 லட்சம் வெள்ளி பெற்றார் என்றும் அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டது.

இது தொடர்பாக நம்பகத்தன்மையை ஆராயாமல், ஒரு  யூடிப் சேனல், தன் பெயரைக் களங்கப்படுத்தும் விதமாகச் செய்தியை வெளியிட்டுள்ளதாக டத்தோ ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

இன்று பத்து கேவ்ஸ் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுத்த ரவிச்சந்திரன்  செய்தியாளர்களைச் சந்தித்தார்.

மித்ராவிடம் இருந்து தாம் எந்த நிதியும் பெறவில்லை எனவும்,

குறிபிட்ட அந்த யூ டியூப் சேனல் ஊடகம் பகிரங்கமாகப் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையேல் அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த ஊடகத்திற்கு 14 நாட்கள் கெடு என்றும், தமிழ் ஆங்கில ஊடகத்தின் வாயிலாக அவர்கள் பொது மன்னிப்புக் கேட்க வேண்டும்  என்றும், அவர் இன்று காலக்கெடு விதித்துள்ளார்!

விளம்பரம்:

0 Comments

leave a reply

Recent News