loader
தேசிய தொழில் பாதுகாப்பு - ஆரோக்கிய திட்டத்தை பிரதமர் தொடக்கி வைத்தார்! - அமைச்சர் சரவணன் வாழ்த்து

தேசிய தொழில் பாதுகாப்பு - ஆரோக்கிய திட்டத்தை பிரதமர் தொடக்கி வைத்தார்! - அமைச்சர் சரவணன் வாழ்த்து

 

தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய முதன்மைத் திட்டத்தை
பிரதமர் தொடக்கி வைத்தார்.இயங்கலை வழி இந்நிகழ்வு நடைபெற்றது.

இதற்கு தமது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ள மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தொழிலிடக் கலாச்சாரத்தை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒட்டுமொத்த உலகையும் தாக்கிய கோவிட் -19 தொற்றுநோய் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை நாம் மறுக்க இயலாது, குறிப்பாகத் தொழிலாளர் வர்க்கம் அதிகமாக பாதிப்புக்குள்ளானதை நாம் உணர்வோம்.

எனவே, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு நாம் பெரிதும் பாடுபட வேண்டியிருக்கும். அதே நேரத்தில், இந்த தொற்றுநோய் மேலும் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்திற்குப் பொதுமக்கள் உதவ வேண்டும் என டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

மலேசியர்கள், குறிப்பாக தொழிலாளர்கள் ஒரு புதிய நடைமுறையில்,  வேலைவாய்ப்புச் சவால்களை எதிர்கொள்ளும் போதிலும், நல்லிணக்கத்துடனும் செழிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,

குறிப்பாக கோவிட் -19 க்குப் பிந்தைய காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதை உறுதி செய்யும் அரசின் நோக்கத்திற்கு ஏற்ப இது அமைந்துள்ளது.

பாதுகாப்பான பணியிடச் சூழலை உறுதி செய்வதற்கு, தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு, தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார முதன்மைத் திட்டம் 2021-2025ஐ உருவாக்குவதன் மூலம் அரசாங்கம் ஒரு தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளது.

தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் தொடர்பில் தேசிய மன்றம் உருவாக்கிய இந்த ஐந்து வருடத் திட்டமானது, ஆரோக்யமான பயணத்தை உறுதி செய்யும் தொழிலாளர்களுக்கான  பாதுகாப்புத் திட்டமாகும்.

இந்த முதன்மைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு யுக்தியும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளின் அடித்தளத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. தவிர, நாட்டின் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வேலை நடைமுறைகளை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் செயல்படும்.

தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம்; ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது. ஏழு (7) முதன்மைத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் 'பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வேலைக் கலாச்சாரத்தை' உருவாக்குவதை உறுதி செய்ய முடியும்.

அதிக உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும், இந்த நாட்டில் தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை முதலாளிகள் மற்றும் பணியாளர்களின் ஒத்துழைப்புடன் நாம் நிறைவேற்ற முடியும். 'பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தொழிலிடக் கலாச்சாரத்தை' வலுப்படுத்த நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

எங்கள் அன்பான மலேசியக் குடும்பத்தின் எதிர்காலத்திற்கான பல்வேறு கொள்கைகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் அரசு வெற்றிபெற உதவிய அனைத்து மலேசியர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின்  தியாகங்கள், அர்ப்பணிப்புகள் மற்றும் பங்களிப்புகள் அனைத்தும் நன்றிக்குரியவை.

இந்த தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்ய முதன்மைத் திட்டம் 2021-2025 வெற்றிபெற அனைத்துத் தரப்பினரும் இணைந்து ஒத்துழைப்பு வழங்குவீர் என எதிர்பார்க்கிறோம் என்று மனிதவள அமைச்சர் தெரிவித்துள்ளார்!

விளம்பரம்:

0 Comments

leave a reply

Recent News