loader
உலுசிலாங்கூர் மகளிர் அணிக்கு சிவகாமியின் வேட்பு மனுத் தாக்கல் மீது புகார்!

உலுசிலாங்கூர் மகளிர் அணிக்கு சிவகாமியின் வேட்பு மனுத் தாக்கல் மீது புகார்!


 உலுசிலாங்கூர், அக். 13-
மஇகா கட்சித் தேர்தலுக்கான மகளிர், இளைஞர் பகுதி வேட்பு மனுத் தாக்கல் நாடு தழுவிய அளவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  உலு சிலாங்கூர் தொகுதி மகளிர் அணித் தலைவி பதவிக்கு சிவகாமி முனியாண்டி - பாத்திமா ஆகிய இருவரும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், சிவகாமி முனியாண்டியின் வேட்பு மனுத்தாக்கல் செல்லுபடியாகாது. அது ம இகா தேர்தல் விதிக்கு முரணானது.  எனவே அந்த வேட்பு மனுத்தாக்கலை நிராகரிக்க வேண்டும் என்ற புகார் கடிதம் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், தலைமைச் செயலாளர் டத்தோ எம்.அசோஜன் முனியாண்டி,  உதவித் தலைவரும் சிலாங்கூர் மாநில தேர்தல் அதிகாரியுமாகிய செனட்டர் டத்தோ டி.மோகன், தேசிய மகளிர் அணித்  தலைவி உஷாநந்தினி, சிலாங்கூர் மாநிலத் தலைவர் எம்.பி.ராஜா, உலு சிலாங்கூர் தொகுதித் தலைவர் கு.பாலசுந்தரம் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த ஆட்சேபக் கடிதத்தை உலு சிலாங்கூர் நடப்பு மகளிர் அணித் தலைவியான பாத்திமா அனுப்பியுள்ளார்.

இந்தக் கடிதத்தின் நகல் மற்றும் அதன் சாராம்சம் கொண்ட தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

மஇகா சட்ட விதிகளின்படி  ஏதாவது ஒரு கிளையில் ஒரு தவணைக்கு மேல் மகளிர் அணித் தலைவியாக பொறுப்பேற்றிருந்த ஒருவர் மட்டுமே தொகுதி மகளிர் அணித் தலைவிக்கு போட்டியிட முடியும்.

ஆனால், சிவகாமி முனியாண்டி கெர்லிங் பகுதியில் ஒரு கிளைத் தலைவராக மட்டுமே பதவி வகித்து வந்துள்ளார்.
மாறாக, கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தின் முடிவின் பேரில் தொகுதி மகளிர் அணி  ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

எனவே எந்த வகையிலும் அவர் தொகுதி மகளிர் அணிக்குப் போட்டியிடும் தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்பதால்,  அந்த ஆட்சேபக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News