loader
மோகனா முனியாண்டி  மீண்டும் தலைமைத்துவத்திற்கு வருகிறார்!

மோகனா முனியாண்டி மீண்டும் தலைமைத்துவத்திற்கு வருகிறார்!

 

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர்  அக்டோபர்-10

ம.இ.காவின் முன்னாள் மகளிர் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி,  நடக்கவிருக்கும்  ம.இ.கா கட்சித் தேர்தலில் தேசிய மகளிர் தலைவி பதவிக்குப் போட்டியிடப்போவது உறுதியாகிவிட்டது.

கடந்த பொதுத்தேர்தலில்  தேசிய முன்னணி  தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து,  அத்தோல்விக்குப் பொறுப்பேற்று,  ம.இ.கா கட்சித் தேர்தலில் தேசிய மகளிர் தலைவி  பதவிக்கு டத்தோ மோகனா முனியாண்டி போட்டியிடவில்லை.

சிறிய இடைவேளைக்குப் பிறகு தற்போது மீண்டும் மகளிர் அணிக்குச் சேவைச் செய்ய களம் இறங்கியுள்ளார் மோகனா முனியாண்டி.

மீண்டும் போட்டியிட வேண்டுமா? என்று யோசித்துக் கொண்டிருந்த மோகனா முனியாண்டிக்கு, மகளிர் அணியினர் ஆதரவு கொடுத்து, அவர் மீண்டும் தலைமைத்துவ பொறுப்புக்கு வரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாகவும், மகளிர் அணியினர் தம் மீது வைத்துள்ள நம்பிக்கைக்குப் புத்துயிர் கொடுக்க இம்முறை போட்டியிடுவதாகவும் தெரியவந்துள்ளது.

மகளிரின் பொருளாதார உருமாற்றம் , குடும்ப வறுமை, வன் கொடுமைகள் தொடர்பாக பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்ச்சியாக தேசிய நிலையில் குரல் கொடுத்து வந்தார் டத்தோ மோகனா முனியாண்டி.

அவருடைய ஈடுபாடு, பங்களிப்பு காரணமாக, மகளிர் அணியின் தலைமைத்துவத்திற்கு மோகனா முனியாண்டி மீண்டும் வரவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியுள்ளதாக  ம.இ.கா மகளிர் அணியினர் வட்டாரத்தில் கூறப்பட்டது.

கோவிட்-19 காலத்தில்  மக்கள் பணியில் அவர் ஈடுபட்ட விதம், குறிப்பாக மகளிர் நலன்,  மகளிர் சார்ந்த வியாபாரங்கள் விரைந்து திறக்கப்படவேண்டும் என அவர் எடுத்த முயற்சி, தாய் சேய் நல பராமரிப்புத் துறை என   டத்தோ மோகனா முனியாண்டி மகளிர் குரலாக ஒலித்தார். அப்படிப்பட்ட துணிச்சல் மிக்க ஒரு தலைவர் மீண்டும் தலைமைத்துவத்திற்கு வரவேண்டும் என மகளிர் அணியினர் மோகனா முனியாண்டியைச் சந்தித்து கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், தனக்கு மீண்டும் ஆதரவு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, டத்தோ மோகனா முனியாண்டி மீண்டும் தேசிய ரீதியில் மகளிர் தலைவிக்குப் போட்டியிட உள்ளது உறுதியாகி உள்ளது.

0 Comments

leave a reply

Recent News