loader
ஆச்சரியம்!  'O' குரூப் ரத்தம் அதிகம் கிடைத்தது!  தேசிய ரத்த வங்கிக்குத் தோள் கொடுத்த எஸ்.பி.கேர் கிளினிக்!

ஆச்சரியம்! 'O' குரூப் ரத்தம் அதிகம் கிடைத்தது! தேசிய ரத்த வங்கிக்குத் தோள் கொடுத்த எஸ்.பி.கேர் கிளினிக்!

செராண்டா,  அக்டோபர் 10: கோவிட்-19 காலக்கட்டத்தில் தேசிய ரத்த வங்கியில் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் , ரத்த சேமிப்பை அதிகரிக்க  எஸ். பி கேர் கிளினிக்  ரத்த தான முகாமை ஏறபாடு செய்தது.

கோவிட்-19 காலக்கட்டத்தில் அரசாங்கம் சில தளர்வுகளை அறிவித்ததும்  எஸ்.பி.கேர் கிளினிக் தேசிய ரத்த வங்கிக்குத் தோள் கொடுக்கும் முயற்சியில் இறங்கியது. 

எஸ்.பி.கேர் இயக்குனர் டாக்டர் சத்ய பிரகாஷ்  கோவிட்-19 காலல்கட்டத்தில் தனது மருத்துவக் குழுவுடன்  பம்பரமாய் சுற்றிவர சிலாங்கூர் - கோலாலம்பூர் வாழ் மக்களுக்கு  உணவு பொருட்களை பி.கே.பி காலகட்டத்தில் வழங்கி வந்தார். இப்போது மக்களுக்கு சில தளர்வு கிடைத்தவுடன்,  மக்கள் மருத்துவத் துறைக்கு உதவ வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கினார். அந்த வகையில் சிரண்டாவில் எஸ்.பி.கேர் ஏற்பாட்டில், தமிழ் மலர் நாளிதழின் ஒருங்கிணைப்பில் நடைப்பெற்ற ரத்த தான முகாமில், 150 பொதுமக்கள் தன்னார்வ முறையில் வருகை தந்து, ரத்த தானம் வழங்க முன்வந்தனர்.  இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் மலர் குழுமத் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன் சிறப்பு வருகை புரிந்தார்.

வருகை அளித்த அனைவருக்கும் இலவச மருத்துவப் பரிசோதனையை எஸ்.பி. கேர் கிளினிக் ஏற்பாடு செய்திருந்தது. அந்த வகையில் ரத்த தானம் வழங்க 100 பேர் தகுதி பெற்று, ரத்த தானம் வழங்கியதாக  டாக்டர் சத்ய பிரகாஷ் கூறினார். 

அதில் ஆச்சிரியம் என்னவென்றால், இன்று ரத்த தானம் செய்ய வந்தவர்களில் அதிகமானோர்  ஓ குரூப் ரத்த வகையைச் சேர்ந்தவர்கள். அதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என டாக்டர் சத்ய பிரகாஷ் தெரிவித்தார்.

6 வது முறையாக எங்கள் முயற்சியில்  இப்படிபட்ட மூகாம் நடைபெறுகிறது இந்த முறை எங்களோடு கைக்கோர்த்து விளம்பரபடுத்திய தமிழ் மலர்  நாளிதழுக்கு நன்றி தெரிவிப்பதாகவும். தேசிய ரத்த வங்கிக்கு கைக்கொடுக்க தொடர்ச்சியாக இந்த முயற்சியை மேற்கொள்ள போவதாக டாக்டர் சத்ய பிரகாஷ் தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News