loader
மைக்கி செயலாளர் பதவிக்கு டத்தோ ஏ.டி குமாரா ராஜா - டத்தோ 'புத்ரி' சிவம் போட்டி!

மைக்கி செயலாளர் பதவிக்கு டத்தோ ஏ.டி குமாரா ராஜா - டத்தோ 'புத்ரி' சிவம் போட்டி!

 

(வெற்றி விக்டர்)
கோலாலம்பூர் அக்டோபர் -8

மைக்கி தேர்தலில்  எல்லா உயர் பதவிகளுக்கும் போட்டி உள்ள நிலையில், துணைச் செயலாளர் பதவிக்கு போட்டியில்லாமல் சுஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செயலாளர் பதவிக்கு  மைக்கியின் நடப்பு பொதுச் செயலாளர்  டத்தோ டாக்டர் ஏ.டி குமாரராஜா போட்டியிடும் நிலையில், டத்தோ ஏ.பி. சிவம்( புத்ரி சிவம்) போட்டியிடுகிறார்.
துணைத்தலைவர் பதவிக்கு நடப்பு துணைத்தலைவர் டத்தோ ராஜசேகரனுடன் ஷாம் சுந்தர் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், உதவித் தலைவர் பதவிக்கு டத்தோ சுப்ரமணியம், டத்தோ டாலிஃப், டத்தோ ஸ்ரீ ஏண்டி, நஜ்ம,  திருநாவுக்கரசு மற்றும் கேசவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பொருளாளர் பதவிக்கு பி.சிவக்குமார் மற்றும் மகேந்திரன் போட்டியிடவுள்ளனர்.

எதிர்வரும் அக்டோபர் 24 ஆம் திகதி மைக்கியின் தேர்தல் தலைநகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News