loader
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்பட்டதாக யூனிசெஃப் தகவல்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்பட்டதாக யூனிசெஃப் தகவல்!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் மலேசியாவில் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்பட்டதாக யூனிசெஃப் மலேசியா தெரிவித்துள்ளது.

மலேசியாவில் கடந்த 2019 ஜனவரி தொடங்கி, 2021 மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் பதிவான தற்கொலைச் சம்பவங்களில் சரிபாதிக்கும் அதிகமான, அதாவது 872 சம்பவங்கள் 15 முதல் 18 வயதுக்குட்ட பதின்ம வயதினருடன் தொடர்புடையவை என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் யூனிசெஃப் மலேசியா சுட்டிக்காட்டி உள்ளது. சிறார்களின் மன நலனைப் பேணவும், மேம்படுத்தவும் சில அம்சங்கள் அவசியமானவை.

ஆனால், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலுக்கு வந்த பின்னர் மலேசியாவில் சிறார்களுக்கு சமூகவியல் அளவிலும், விளையாடவும் உடல் ரீதியிலான தொடர்புகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன என்கிறார் யூனிசெஃப் மலேசியாவின் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவின் தலைவரான சாரா நோர்டன் ஸ்டால்.

0 Comments

leave a reply

Recent News