loader
மீண்டும் மோகனாவா? அல்லது உஷா நந்தினியா? - ம.இ.கா வில் பரபரப்பு

மீண்டும் மோகனாவா? அல்லது உஷா நந்தினியா? - ம.இ.கா வில் பரபரப்பு

 

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் அக்டோபர் - 4

கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னனியின் தோல்வி காரணமாக, அதற்குப் பொறுப்பேற்று பலர் ம.இ.கா கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. அப்படி போட்டியிடாமல் விலகியவர்களில் ஒருவர் ம.இ.காவின் முன்னாள் மகளிர் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி.

தற்போது நடப்புத் தலைவியாக உஷா நந்தினி பதவி வகித்துவரும் நிலையில், ம.இ.காவின் கட்சி தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.  தேசிய மகளிர் தலைவிக்கான தேர்தல்  எதிர்வரும் அக்டோபர் 17 ஆம் திகதி   நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தேசிய மகளிர் தலைவி பதவிக்கு போட்டி இருக்கும் எனவும், மீண்டும் டத்தோ மோகனா முனியாண்டி  போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் ம.இ.கா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அப்படி இந்த இருவரும் போட்டியிட்டால் அது ஒரு சவால் மிக்கத் தேர்தலாக அமையும்.

நடப்புத் தலைவி உஷா நந்தினியா? அல்லது முன்னாள் தலைவி மோகனா முனியாண்டியா? யாரை ம.இ.கா மகளிர் பிரிவு தேர்வு செய்யப் போகிறார்கள்?

0 Comments

leave a reply

Recent News