loader
என் ஆதரவு  துணைத்தலைவருக்கே! மீறி போட்டியிருந்தால்?.....

என் ஆதரவு துணைத்தலைவருக்கே! மீறி போட்டியிருந்தால்?.....

(வெற்றி விக்டர்)

கோலாலம்பூர் அக்டோபர் - 3

ம.இ.கா-வின்  மத்திய செயலவை கூட்டம் இன்று ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த டான் ஸ்ரீ விக்னேஸ்வரன், இளைஞர், மகளிர், புத்ரா புத்ரி தொகுதி மாநில - மத்திய செயலவை உதவித் தலைவர் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்தார்.

ஆனால், மிகவும் பேசப்பட்டு வந்த  கட்சியின் துணைத்தலைவர் போட்டியை மட்டும் அவர் குறிப்பிடவில்லை.

பின்னர் செய்தியாளர்கள்  துணைத்தலைவர் பட்டியல் இல்லையே... துணைத்தலைவருக்குப் போட்டி இல்லையா? என்று கேட்டவுடன், துணைத்தலைவர் பட்டியல்  இல்லையா?  அதுவும் உதவித் தலைவர் தேர்தல் சமயத்தில் நடைபெறும் எனப் பதில் அளித்தார்.

துணைத்தலைவருக்குப் போட்டி இருக்காது. என் முழு ஆதரவு டத்தோ ஸ்ரீ சரவணனுக்கு. அதற்கு மீறி போட்டி இருந்தால்?... என்று ஒரு புன்னகை பதில் கொடுத்துள்ளார்.

ம.இ.கா தலைவரின் முழு ஆதரவு நடப்புத் துணைத்தலைவருக்கே என்று பகிரங்கமாக டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் வெளிப்படையாகத்  தெரிவித்துவிட்டதால், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டி இருக்காது என்ற  மறைமுக பதில் மேலோங்கி இருக்கிறது.

இந்த முறையும்  3 உதவித் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க போட்டி நிலவும். அதோடு 2 உதவித் தலைவர்கள் பின்னர் நியமிக்க படுவார்கள் என டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கட்சியில் குழப்பம் இருக்கக்கூடாது என்பதில்  தாம் தெளிவாக இருப்பதாகவும், அந்த வகையில்  துணைத்தலைவருக்குப் போட்டி இருக்காது எனத் தாம் நம்புவதாகவும் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

குறிப்பு:

( ம.இ.கா தேர்தல் பட்டியல் பின்னர் வெளியிடப்படும்....)

0 Comments

leave a reply

Recent News