loader
தடுப்பூசித் திட்டத்தில் அந்நிய நாட்டவரைத் தவிர்க்காதீர்! அது நோய் பரவலுக்கு வழி வகுக்கலாம்!

தடுப்பூசித் திட்டத்தில் அந்நிய நாட்டவரைத் தவிர்க்காதீர்! அது நோய் பரவலுக்கு வழி வகுக்கலாம்!

கோலாலம்பூர், அக் 2: அந்நிய நாட்டினருக்குத் தடுப்பூசி  செலுத்துவதன் மூலம் கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினர் சானி ஹம்சான்  கூறினார்.

சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் நடமாடும் தடுப்பூசித் திட்டத்தில் பங்கேற்கும் அந்நிய நாட்டினரின் எண்ணிக்கை ஊக்கமூட்டும் வகையில் உள்ளதாக அவர் சொன்னார்.

அந்நிய நாட்டினரை நாம் ஒதுக்கி விடமுடியாது. உணவகம், மார்க்கெட், பள்ளிவாசல் என எங்கும் அவர்கள் நம்முடன் இருக்கின்றனர்  என்றார் அவர்.

அந்நிய நாட்டினரை தவிர்த்து நாம் மட்டும் தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் எந்த பயனும் இல்லை. தடுப்பூசித் திட்டத்தில் அவர்கள் தவிர்க்கப்படும் பட்சத்தில் கோவி-19 பெருந்தொற்று அபாயக் கட்டத்தை எட்டுவதற்கான சாத்தியம் உள்ளது என்று அவர் மேலும் சொன்னார்.

0 Comments

leave a reply

Recent News