loader
ENDEMIC கட்டத்தை எட்டிய பிறகே மலேசிய எல்லைகள் சுற்றுலா பயணிகளுக்காகத் திறக்கப்படும்

ENDEMIC கட்டத்தை எட்டிய பிறகே மலேசிய எல்லைகள் சுற்றுலா பயணிகளுக்காகத் திறக்கப்படும்

கோலாலம்பூர், அக் 1: எண்டேமிக் (endemic) கட்டத்தை எட்டிய பிறகே மலேசிய எல்லைகள் சுற்றுலா பயணிகளுக்காகத் திறக்கப்படும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹம்ஸா ஜைனுதீன் தெரிவித்தார்.

தற்போது நாடு பெருந்தொற்றுக் காலகட்டத்தில்தான் இன்னும் உள்ளது என்றும், எண்டேமிக் நிலையை எட்டிவிட்டதா என்பதை சுகாதார அமைச்சுதான் முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.

மேலும் அத்தகைய நிலையை எட்டும் பட்சத்தில் சுகாதார அமைச்சு உடனடியாக அறிவிக்கும்.

உண்மையில் குடிநுழைவுத்துறை தயாராக உள்ளது. அதேபோல் பொதுச் செயல் படையுமான General Operations Force (GOF) கூட தயார் நிலையில் உள்ளது. நாங்களும் கூட எல்லைகளை திறக்கும் விஷயத்தில் தயார் நிலையில்தான் இருக்கிறோம்.

எனினும் சுகாதார அமைச்சுதான் முடிவெடுக்கும். எல்லைகளைக் கடக்கும் மலேசியர்களும் வெளிநாட்டவர்களும் அனைத்து எஸ்ஓபிக்களையும் பின்பற்ற வேண்டியிருக்கும்.

அவை என்னென்ன என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

0 Comments

leave a reply

Recent News